Friday, August 21, 2015

பயிற்சி முகாம் மற்றும் மாவட்டப் பேரவை

2015 ஆகஸ்ட் 28,29  தேதிகளில் காயத்திரி பீடம் திருமூர்த்தி மலை உடுமலையில் நடைபெற்ற பயிற்சி முகாம் மற்றும் மாவட்டப் பேரவை 






Thursday, July 23, 2015

ஊராட்சி செயலருக்கு சிறப்பு படி



கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு படியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியிலிருந்து ரு.1000 வழங்க அரசாணை (நிலை )எண்:101 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் :10.07.2015 வெளியீடு. 


அரசாணை எண் : 101

Friday, June 26, 2015

பெருந்திரள் முறையீடு இயக்கம்



அன்பிற்கினிய தோழர்களே வணக்கம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மிகுந்த பணிச்சுமைகளுடன் ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்துறையில் அமுல்படுத்தப்படும் எந்த திட்டமாக இருந்தாலும், எத்தகைய புள்ளிவிபரங்களாக இருந்தாலும், எத்தகைய கணக்கெடுப்பாக இருந்தாலும் ஊராட்சி செயலாளர்கள் மூலமாகவே முடிகிறது. முழு நேர பணியாளர்களை காட்டிலும் அதிக நேரம் பணிபுரிபவர்களாக உள்ள ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஊதியம் என்ற பெயரில் குறைவான ஊதியத்தை வழங்கி உழைப்பு சுரண்டல் நடத்தி வருகிறது அரசு.
இந்நிலையில் தமிழக அரசு 17.03.2015 பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட ஊராட்சி செயலாளர்களின் ஊதிய விகித மாற்றம் மற்றும் கருணை அடிப்படை பணி நியமனம் குறித்த அரசாணையினை உடன் பிறப்பிக்க கோரி சென்னை இயக்குநரகம் முன்பு 03.07.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடை பெற உள்ள பெருந்திரள் முறையீடு இயக்கத்தை வெற்றியாக்கிட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் அனைவரையும் அறைகூவி அழைக்கின்றோம்.

“சுருண்டு கிடந்தால் சிலந்தி வளையும் சிறைதான்
விருண்டு எழுந்தால் சீனப் பெருஞ்சுவரும் ஓரடிதான்”
                -எழுவோம் தோழர்களே !

Monday, May 18, 2015

ஊராட்சி பணியாளர்கள் ஊதியத்திற்கு தனி கணக்கு

கணக்கு எண் : 7
          
  

            ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கான ஊதியத்தினை மாதந்தோறும் தவறாமல் வழங்குவதற்கு ஏதுவாக புதியதாக கணக்கு எண் : 7 - "village Panchayat Staff Salary Account" துவங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (.து-1)துறை  அரசானை (நிலை) எண் : 89 நாள் : 15.06.2015 வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி அரசாணையினை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ள மாவட்ட மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
 




நன்றி

புதுப்பிக்கப்பட்ட படிவம் 30

அன்பிற்கினிய தோழர்களே

          

       கிராம ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் படிவம் 30- கணிணியினை பயன்படுத்தி எளிய முறையில் தயாரிப்பதற்கான புரோக்ராம் புதுப்பிக்கப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை நமது சங்க உறுப்பினர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட மையம் கேட்டுக் கொள்கிறது.

(password : 256226)

கூடுதல் தகவல்கள் தேவைப்படின் தொடர்பு கொள்க   9715254996.


நன்றி