Friday, August 26, 2011

ஊராட்சி உதவியாளர் பெயர் மாற்றம்

                                  நமது நீண்ட நாளைய கோரிக்கையான ஊராட்சியின் அனைத்து பணிகளையும் கவனித்து வரும் ஊராட்சி உதவியாளரை ஊராட்சி செயலராக்க வேண்டும் என்பதற்கினங்க சட்ட சபையின் உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கையில் ஊராட்சி உதவியாளரை "ஊராட்சி செயலர்" என பெயர் மாற்றம் செய்து ரூ.500/- சிறப்பு படியும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 13, 2011

அரசாணை 39 நாள் 13.06.2011

தோழர்களே வணக்கம்,

                             ஊராட்சி உதவியாளர் நிலை 1, நிலை 2-ல் இருந்து இளநிலை உதவியாளராக 01.04.2003-க்கு முன்னர் பதவி உயர்வு பெற்றவர்களின் முந்தைய தொகுப்பூதிய பணிக்காலத்தில் 50%  ஓய்வூதிய கணக்கில் எடுத்து கொள்வதற்கான அரசாணை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

GO page 1/2
GO page 2/2

Thursday, May 19, 2011

மாவட்ட செயற்குழு கூட்டம் 21.05.2011

அன்பிற்கினிய தோழர்களே

                         தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மையத்தின் மே மாதத்திற்கான மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 21.05.2011 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேற்படி மாவட்ட செயற்குழுவில் நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னனி ஊழியர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட மையத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அழைப்பிதழ்

Friday, March 11, 2011

மாவட்ட செயற்குழு கூட்டம் 12.03.2011

வணக்கம் தோழர்களே,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவரகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மையத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற 12.03.2011 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னனி ஊழியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அழைப்பிதழ்

Friday, February 4, 2011

தொடர் வேலை நிறுத்த போராட்டம்

அன்பிற்கினிய தோழர்களே,
வணக்கம், 
வருகின்ற பிப்ரவரி 08,09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த மாநில மையம் அறைகூவல் விடுத்ததையடுத்து நமது திருப்பூர் மாவட்ட மையத்தின் சார்பில் 05.02.2011 அன்று காங்கயம் எம்.என்.பி லாட்ஜில் மாநில செயலாளர் ம.விஜய பாஸ்கர் போராட்ட விளக்க உரையுடன் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடை  பெறுவதிலும் அதை தொடர்ந்து  பிப்ரவரி 08,09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தொடர் வேலை நிறுத்த போராட்டத்திலும் நமது சங்க தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.